ADDED : ஆக 18, 2026 09:43 PM
அ நிறம் | அளவு
திருக்கனுார்: செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில் 7ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வரும் 26ம் தேதி நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 7ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வரும் 26ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, அன்று காலை 9:00 மணிக்கு கோபூஜை, விஷ்வக்சேன ஆராதனம், புண்யாஹவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆவாஹணம் நடக்கிறது.
காலை 11:00 மணிக்கு பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் மூலவர், உற்சவர் திருமஞ்சன சேவை சாற்றுமுறை நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சர்வபூஷன அலங்காரத்தில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
