UPDATED : ஆக 18, 2026 09:47 PM
ADDED : ஆக 18, 2026 09:43 PM
புதுச்சேரி: இங்கிலாந்தில் உயர்கல்வி குறித்த கருத்தரங்கம், மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் முத்தமிழ்செல்வி வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைத்தார். பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம், மருத்துவக் கல்லுாரி இயக்குநர் காக்னே, மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி முதல்வர் மலர்க்கண் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழக கல்லுாரியை சேர்ந்த நிக்கோ பிலிப்ஸ் , ஐ.எம்.ஐ.எம்.எஸ்., கேம்பிரிட்ஜ் இயக்குநர் பிராங்கிளின் ஆகியோர், இங்கிலாந்தில் உயர்கல்வி வாய்ப்புகள், கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்புகள், வெளிநாட்டுக் கல்விக்கான விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் சேர்க்கைக்கான தகுதிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கினர்.
ஏற்பாடுகளை கல்லுாரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் பிரியதர்ஷினி செய்திருந்தார்.
கருத்தரங்கின் முதல் அமர்வில் செவிலியர் கல்லுாரி மாணவர்களும், இரண்டாம் அமர்வில் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்களும் பயன்பெற்றனர்.
