ADDED : ஆக 18, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உருளையான்பேட்டையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
உருளையான்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது ஆட்டுப்பட்டி அருகில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்க விரைந்து சென்று அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அதில் வாணரப்பேட்டை தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது உசேன், 67; என்பவரது கடையில் குட்கா விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின் கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
