தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக்கிலிருந்து விழுந்த முதியவர் உயிரிழப்பு

பைக்கிலிருந்து விழுந்த முதியவர் உயிரிழப்பு

பைக்கிலிருந்து விழுந்த முதியவர் உயிரிழப்பு


ADDED : ஆக 18, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பைக்கில் பின்னால் உட்கார்ந்து சென்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்தார். 

செஞ்சி அடுத்த பனபாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், 71; இவர் தனது அண்ணன் மகன் வீரபாண்டியன் என்பவருடன்  நேற்று முன்தினம் மயிலம் கோவிலுக்கு செல்வதற்காக பைக்கில் பின்னால் உட்கார்ந்து சென்று கொண்டிருந்தார்.

பத்துகண்ணு மெயின் ரோட்டில் சென்ற போது, ஸ்பீடு பிரேக்ரில் பைக் ஏறி இறங்கியபோது , மாயகிருஷ்ணன் கீழே விழுந்தார்.

படுகாயமடைந்த வரை உடன் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

வீரபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போக்குவரத்து போலீசார் (மேற்கு) வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us