/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
/
முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
ADDED : ஜூலை 06, 2024 04:36 AM
புதுச்சேரி: முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில், பல் மருத்துவம் முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு தரவரிசை பட்டியல், சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மாணவர் சந்தோஷ் 678 மதிப்பெண் எடுத்து அகில இந்திய அளவில் 50வது இடத்தையும், புதுச்சேரி மாநில அளவில்,முதலிடத்தையும் பிடித்துள்ளார். மாணவி கிருத்திகா 674 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 2வது இடத்தையும், மாணவர் வெங்கடேஷ் 669 மதிப்பெண் எடுத்து 3வது இடமும் பிடித்துள்ளனர்.
பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் இரட்டை குடியுரிமை வைத்திருப்பவர்கள் குறித்து ஆட்சேபனைகள் இருந்தால், 5 நாட்களுக்குள் தெரிவிக்கலாம், என சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.