/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நவீன நாடக ஒப்பாய்வு' நுால் வெளியீடு
/
'நவீன நாடக ஒப்பாய்வு' நுால் வெளியீடு
ADDED : செப் 15, 2024 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பேராசிரியர் சுபாஷினி எழுதிய நுால் வெளியீட்டு விழா சட்டசபையில் நடந்தது.
மயிலம் பொறியியல் கல்லுாரி தமிழ்துறை தலைவர் பேராசிரியர் சுபாஷினி எழுதிய 'நவீன நாடக ஒப்பாய்வு' நுாலை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் வெளியிட்டார். முதல் நுாலை கலைப் பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் பெற்றுக் கொண்டார். இந்நுால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திரா பார்த்தசாரதி, கர்நாடகத்தைச் சேர்ந்த கிரிஷ் கார்னாட் ஆகியோரின் நவீன நாடக படைப்புகள் மூலம் கொண்டு வந்த மாற்றங்கள், சமூக வளர்ச்சி, தொன்மை, சமூகவியல் , பெண்ணியம் போன்றவற்றை ஆராய்ந்து தரப்பட்டுள்ளது.