/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
10ம் வகுப்பு தேர்வி்ல் புதுச்சேரி 89.14 சதவீதம் தேர்ச்சி
/
10ம் வகுப்பு தேர்வி்ல் புதுச்சேரி 89.14 சதவீதம் தேர்ச்சி
10ம் வகுப்பு தேர்வி்ல் புதுச்சேரி 89.14 சதவீதம் தேர்ச்சி
10ம் வகுப்பு தேர்வி்ல் புதுச்சேரி 89.14 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 11, 2024 12:05 AM

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 89.14 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைவிட 0.02 சதவீதம் கூடுதலாகும்.
புதுச்சேரி, காரைக்காலில் கடந்த மார்ச்-ஏப்ரல் மாதம் நடத்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 7,590 மாணவர்கள், 7,362 மாணவிகள் என மொத்தம் 14,952 பேர் எழுதினர். அவர்களில் 6,527 மாணவர்கள், 6,801 மாணவிகள் என மொத்தம் 13,328 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.14 ஆகும். மாணவர்கள் 85.99; மாணவிகள் 92.38 சதவீதம் ஆகும். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட 6.39 சதவீத மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகள்:
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 2,924 மாணவர்கள், 3,099 மாணவிகள் என மொத்தம் 6023 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 2,086 மாணவர்கள், 2,617 மாணவிகள் என மொத்தம் 4,703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 78.08. இது கடந்தாண்டைவிட 0.84 சதவீதம் குறைவு.
தனியார் பள்ளி:
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளை சேர்ந்த 4,666 மாணவர்கள், 4,263 மாணவிகள் என மொத்தம் 8,929 பேர் எழுதினர். அவர்களில் 4,441 மாணவர்கள், 4,184 மாணவிகள் என மொத்தம் 8,625 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.60. கடந்தாண்டைவிட 0.99 சதவீதம் அதிகம்.
புதுச்சேரி பிராந்தியம்
புதுச்சேரி பிராந்தியத்தில் 6,380 மாணவர்கள், 6,122 மாணவிகள் என மொத்தம் 12,502 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 5,657 மாணவர்கள், 5,755 மாணவிகள் என 11,412 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.28.
அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 4,697 பேரில் 3,837 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 81.69 சதவீதமாகும். இது கடந்தாண்டை விட 0.14 சதவீதம் குறைவு.
தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7,805 பேரில் 7,575 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.05 ஆகும். .
காரைக்கால் பிராந்தியம்
காரைக்காலில் 1,210 மாணவர்கள், 1,240 மாணவிகள் என மொத்தம் 2,450 பேர் எழுதினர். அவர்களில் 870 மாணவர்கள், 1,046 மாணவிகள் என மொத்தம் 1916 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 78.20. அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 1,326 பேரில் 866 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 65.31. இது கடந்தாண்டைவிட 2.75 சதவீதம் குறைவாகும். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 1,124 பேரில் 1,050 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.42.
100க்கு 100 மதிப்பெண்
பொதுத் தேர்வில் மொத்தம் 553 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். அதில் ஆங்கிலம்-20; கணிதம்-355; அறிவியல்-77; சமூகஅறிவியல்-101 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்.
அரசு பள்ளிகளில் கணிதம்-15, அறிவியல்-3, சமூக அறிவியல்-4 என மொத்தம் 22 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சென்டம் பள்ளிகள்
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மொத்தமுள்ள 289 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 107 பள்ளிகள் புதுச்சேரியில் 90 பள்ளிகளும், காரைக்காலில் 17 பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி அளித்துள்ளன.
மொத்தமுள்ள 108 அரசு பள்ளிகளில் புதுச்சேரியில் 7, காரைக்காலில் 1 என மொத்தம் 8 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அளித்துள்ளன.
சிறப்பு பள்ளியும்
100 சதவீதம் தேர்ச்சி
சமூக நலத் துறையின் கீழ் பிள்ளைச்சாவடியில் இயங்கி வரும் ஆனந்தரங்கப்பிள்ளைச்சாவடி சிறப்பு பள்ளியில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீதம் தேர்ச்சியை அளித்துள்ளனர்.