ADDED : மார் 22, 2024 05:53 AM
புதுச்சேரி : லோக்சபா தேர்தல் காரணமாக, பொதுமக்கள் நுழைய தடை விதித்து, புதுச்சேரி சட்டசபை மூடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதனால் புதுச்சேரி சட்டசபைக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள அலுவலகத்திற்கு முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் வெளிநபர், கட்சி நபர், தொகுதி மக்கள் வர அனுமதி கிடையாது.
இதைத்தொடர்ந்து, சட்டசபை நுழைவு வாயிலை, இழுத்து மூடி தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் படி, சட்டசபை செயலாளர் தயாளன் உத்தரவிட்டார். இந்நிலையில், சட்டசபை காவலர்கள், நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டசபை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் முடியம் வரை, இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

