/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ெஹலிகாப்டரில் பறந்து பிரசாரம் புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் 'ரெடி'
/
ெஹலிகாப்டரில் பறந்து பிரசாரம் புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் 'ரெடி'
ெஹலிகாப்டரில் பறந்து பிரசாரம் புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் 'ரெடி'
ெஹலிகாப்டரில் பறந்து பிரசாரம் புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் 'ரெடி'
ADDED : ஏப் 02, 2024 03:50 AM
புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், தொகுதி முழுவதும் ெஹலிகாப்டரில் பறந்து சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டுமன்றி, தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் பரவி உள்ளது.
இந்த யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான காரைக்கால், தலைநகரான புதுச்சேரியில் இருந்து 132 கிலோ மீட்டர் துாரத்தில் தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
இன்னொரு பகுதியான மாகி, 614 கிலோ மீட்டர் துாரத்தில் கேரளாவின் கண்ணுார் மாவட்டத்துக்கு அருகில் அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ளது.
மற்றொரு பகுதியான ஏனாம், 822 கிலோ மீட்டர் துாரத்தில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மத்தியில் உள்ளது.
அதாவது, புதுச்சேரியில் இருந்து மாகி பகுதிக்கு செல்வதற்கு 13 மணி நேரமும், ஏனாம் செல்வதற்கு 15 மணி நேரமும் சாலையில் பயணம் செய்ய வேண்டும்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த பகுதிகளுக்கு செல்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது.
மேலும், கால விரையமும் ஏற்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு முதல்கட்டத்தில் நடக்க உள்ளதால், குறைந்த நாட்களே அவகாசம் உள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும்.
இந்த விஷயங்களை கருத்தில் கொண்டும், மூன்று மாநிலங்களில் பரவி உள்ள புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தின் சிரமத்தை கவனத்தில் கொண்டும் உதவிக்கரம் நீட்டுவதற்கு பா.ஜ., தலைமை முன் வந்துள்ளது.
ஏனாம், மாகி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு நமச்சிவாயம் விரைவாக சென்று பிரசாரம் மேற்கொள்வதற்கு வசதியாக கட்சி தலைமையால் ெஹலிகாப்டர் வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரிக்கு நாளை வர உள்ள தனியார் நிறுவன ெஹலிகாப்டர் லாஸ்பேட்டை விமான நிலையத்தில் நிறுத்தப்படும். தேவைப்படும் நேரத்தில் ெஹலிகாப்டரில் பறந்து சென்று நமச்சிவாயம் பிரசாரம் செய்ய உள்ளார்.
கட்சி தலைமையின் அதிரடி நடவடிக்கையால் புதுச்சேரி பா.ஜ.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

