/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பஸ் நிலையம் 5ம் தேதி இடமாற்றம்
/
புதுச்சேரி பஸ் நிலையம் 5ம் தேதி இடமாற்றம்
ADDED : மே 29, 2024 05:16 AM
புதுச்சேரி : புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புனரமைக்கும் பணி நடப்பதால், பஸ் நிலையம் ஏ.எப்.டி., மைதானத்திற்கு வரும் 5ம் தேதிக்கு பிறகு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்ல முடியாமல் இடம் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, பஸ் நிலையத்தை, தற்காலிகமாக ஏ.எப்.டி., மைதானத்திற்கு மாற்ற நகராட்சி முடிவு செய்து, அதற்கான பணிகள் துவக்கப்பட்டது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் நடந்ததை அடுத்து, பணிகள் கிடப்பில் போடப்பட்டது. வரும் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவித்த பின், 5ம் தேதிக்கு பிறகு பஸ் நிலையம் மாற்றப்பட உள்ளது.
தற்போது, ஏ.எப்.டி. மைதானத்தில், பயணியர் நிழற்குடை அமைக்கும் நடந்து வருகிறது.