ADDED : மே 22, 2024 01:09 AM
பாலத்தில் மழை நீர் தேக்கம்
ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்டுள்ள மண் குவியலை அகற்றாததால், லேசான மழைக்கே பாலத்தில் குளம் போல்தண்ணீர் தேங்கி நிற்கிறது.
பச்சையப்பன், வடமங்கலம்.
போக்குவரத்து நெரிசல்
முருங்கப்பாக்கம் முதல் மரப்பாலம் வரைசாலையின் அகலம் குறைவாக இருப்பதால்,தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
முத்துக்குமரன், புதுச்சேரி.
புதுச்சேரி கொசக்கடை வீதி, ரங்கப்பிள்ளைவீதிகளில் பகல் முழுவதும் லாரிகள் சரக்கு ஏற்றிஇறக்குவதால் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.
பால்ராஜ், புதுச்சேரி.
சென்டர் மீடியன் தேவை
புதுச்சேரி காமராஜர் சாலையில் ராஜிவ் சிக்னலில் இருந்து பாலாஜி தியேட்டர் வரை வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.
கலைச்செல்வி, பிருந்தாவனம்.
கழிவு நீர் தேக்கம்
முத்தியால்பேட்டை கணேஷ் நகர், அங்காளம்மன் கோவில் தெருவில் வாய்க்காலில் அடைப்புஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
ஆண்டணிதாஸ், முத்தியால்பேட்டை.
கொம்பாக்கம் சோனியாகாந்தி நகர், குளத்துமேட்டுத்தெருவில், கழிவுநீர் சாலையில்தேங்கி நிற்கிறது.
ரமேஷ், கொம்பாக்கம

