/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமெரிக்க சர்வதேச நினைவாற்றல் போட்டியில் புதுச்சேரி இன்ஜி., மாணவர் விஷ்வா சாம்பியன்
/
அமெரிக்க சர்வதேச நினைவாற்றல் போட்டியில் புதுச்சேரி இன்ஜி., மாணவர் விஷ்வா சாம்பியன்
அமெரிக்க சர்வதேச நினைவாற்றல் போட்டியில் புதுச்சேரி இன்ஜி., மாணவர் விஷ்வா சாம்பியன்
அமெரிக்க சர்வதேச நினைவாற்றல் போட்டியில் புதுச்சேரி இன்ஜி., மாணவர் விஷ்வா சாம்பியன்
ADDED : பிப் 22, 2025 09:36 PM

அமெரிக்காவில் நடந்த சர்வதேச நினைவாற்றல் திறன் போட்டியில் புதுச்சேரி கல்லுாரி மாணவர் விஷ்வா ராஜகுமார் உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
உலக அளவில் நினைவாற்றலை சோதிக்க மெமரி லீக் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நினைவாற்றல் போட்டி மிகவும் சவாலானது.
எண்கள், படங்கள் மற்றும் சொற்களின் வரிசைகளை விரைவாக மனப்பாடம் செய்து துல்லியமாக நினைவுபடுத்த வேண்டும். இணையம் வழியாக நடத்தப்படும் இப்போட்டி உலக புகழ்பெற்றது.
இந்த போட்டியில் ஆன்லைன் வாயிலாக பங்கேற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லுாரி ஐ.டி., துறை நான்காம் ஆண்டு மாணவர் விஷ்வா ராஜகுமார் 13.50 வினாடிகளில் 80 இலக்க எண்கஸைள மனப்பாடம் செய்தும் 8.40 நொடிகளில் 30 படங்களையும் நினைவுபடுத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ராஜ்குமாரின் அற்புதமான செயல்திறன் மெமரி லீக் வலைத்தளத்தில் 5,000 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை வெற்றார். மெமரி லீக் போட்டியில் தகுதி பெற்ற விஷ்வா ராஜகுமார் இறுதி சுற்றில் முன்னணியில் உள்ள 16 போட்டியாளர்களுடன் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு ஏற்பட்டது.
இரண்டு சுற்றுகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்தால் வெளியேற வேண்டியது தான். மற்ற அனைவரும் இரண்டு சுற்றுகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்து வெளியேற, விஷ்வா ராஜகுமார் தோல்வியே இல்லாமல் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இவர் புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகர் 4-வது குறுக்கு தெருவில் குடும்பத்துடன் வசிக்கின்றார். தந்தை ராஜகுமார்,47, அப்பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். தாய் ஜெயலட்சுமி,41; ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இருவரும் மகனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
விஷ்வா ராஜ்குமார் கூறியதாவது:
நினைவாற்றலுக்கும் நீர்ச்சத்துக்கும் முக்கியத் தொடர்பு உள்ளது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மூளையை கூர்மையாக வைத்திருக்க உதவும். அதேபோல் நினைவற்றாலுக்கு தொடர் பயிற்சியும் அவசியம். உதாரணமாக பாகுபலி போன்ற சினிமாவை படக்காட்சி, இசையுடன் பார்க்கும்போது நமக்கு மறப்பதில்லை.
அதேபோன்ற ஒரு கதையை எழுத்தில் புத்தகத்தில் படிக்கும்போது மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் கதையாக தொடர்பு படுத்தினால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
இதுவே என்னுடைய நினைவாற்றலுக்கு சூட்சுமம்' என்றார்.

