/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எதிர்கட்சியினர் எம்.பி.,யானால் புதுச்சேரிக்கு பிரயோஜனம் இல்லை
/
எதிர்கட்சியினர் எம்.பி.,யானால் புதுச்சேரிக்கு பிரயோஜனம் இல்லை
எதிர்கட்சியினர் எம்.பி.,யானால் புதுச்சேரிக்கு பிரயோஜனம் இல்லை
எதிர்கட்சியினர் எம்.பி.,யானால் புதுச்சேரிக்கு பிரயோஜனம் இல்லை
ADDED : மார் 29, 2024 04:46 AM

புதுச்சேரி: எதிர்கட்சியினர் எம்.பி.யானால் புதுச்சேரிக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என முதல்வர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலியார்பேட்டையில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;
இண்டியா கூட்டணி தனித்தனியாக பிரிந்து சென்று விட்டது. மொத்தமாக 100 இடங்கள் கூட வராது.
அதிலும் காங்., கட்சிக்கு 40 இடம் கிடைப்பது சந்தேகமே. அந்த கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால் ஒரு பிரேஜனமும் இல்லை. மத்திய அரசில் யாரையும் பார்க்கவும் முடியாது. புதுச்சேரிக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவும் முடியாது. மத்திய அரசுடன் சேர்ந்து இருக்கும் கட்சி எம்.பி.யாக சென்றால் புதுச்சேரி மக்களுக்கு லாபம் கிடைக்கும். திட்டங்கள் சுலபமாக பெறலாம்.
முதியோர் உதவித்தொகை உயர்வு, கல்வி உதவித்தொகை, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு எல்.கே.ஜி. முதல் பி.எச்.டி. வரை கல்வி கட்டணம் செலுத்தப்படுகிறது.
70 ஆயிரம் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை செலுத்தி வருகிறோம். அறிவித்த திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறோம். சாலைகளை சரி செய்ய ரூ. 205 கோடி ஒதுக்கி செய்து வருகிறோம்.
அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இன்னும் 2 ஆண்டு ஆட்சி உள்ளது. மீதமுள்ள திட்டங்களை செயல்படுத்துவோம். மத்திய அரசுடன் இணைந்து இருந்தால் தான் நிதி கிடைக்கும்.
வைத்திலிங்கம் 5 ஆண்டு எம்.பி.யாக இருந்தும் ஒன்று செய்யவில்லை. மீண்டும் சென்றால் ஒன்றும் செய்ய முடியாது பார்லிமெண்டில் உட்கார்ந்து விட்டு வரலாம். நமக்கு புதுச்சேரி வளர்ச்சி முக்கியம்.
மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெற வேண்டும் என்றால், நம் வேட்பாளர் பார்லிமெண்ட் செல்ல வேண்டும். எதிர்கட்சியினர் வெற்றி பெற்று அங்கு சென்றால், புதுச்சேரிக்கு ஒரு பிரோஜனமும் இல்லை எனப் பேசினார்.

