/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சொத்து வரியை செலுத்தி ஜப்தியை தவிர்த்து கொள்ள வேண்டும் புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை
/
சொத்து வரியை செலுத்தி ஜப்தியை தவிர்த்து கொள்ள வேண்டும் புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை
சொத்து வரியை செலுத்தி ஜப்தியை தவிர்த்து கொள்ள வேண்டும் புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை
சொத்து வரியை செலுத்தி ஜப்தியை தவிர்த்து கொள்ள வேண்டும் புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை
ADDED : ஜூன் 26, 2024 07:33 AM
புதுச்சேரி : சொத்து வரி, திட கழிவு வரியை செலுத்தி வட்டி, ஜப்தி நடவடிக்கையை தவிர்த்து கொள்ள வேண்டும் என புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் திடக்கழிவு அகற்றும் கட்டணம் ஆகியவைக்கான 2024-25ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு கேட்பு அறிக்கை தயார் செய்து வார்டு வாரியாக விநியோகிக்கும் பணி துவங்கியுள்ளது.
பொதுமக்கள் கேட்பு அறிக்கை கிடைக்க பெறும் வரை காத்திருக்காமல் இதற்கு முன் சொத்து வரி செலுத்திய ரசீது அல்லது கணினி கேட்பு அறிக்கை இவைகளில் ஏதாவது ஒன்றினை கொண்டு வரியை கட்டி ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்.
சொத்து வரியை புதுச்சேரி கம்பன் கலையரங்கம், முத்தியால்பேட்டை நகராட்சி மார்க்கெட் வணிக வளாகம், நெல்லித்தோப்பு மேரி அலுவலகம், முதலியார்பேட்டை மேரி அலுவலகத்தில் செலுத்தலாம்.
வரி செலுத்தும் இடங்களில் உள்ள பி.ஓ.எஸ்., கருவி வாயிலாக டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு, கியூ.ஆர்., கோடு பயன்படுத்தியும் செலுத்தலாம். காசோலை அல்லது வரைவோலையாக செக் அல்லது டி.டி.,யை ஆணையர், புதுச்சேரி நகராட்சி என்ற பெயரில் எடுத்தும் செலுத்தலாம். இல்லையெனில் https://lgrams.py.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் செலுத்தலாம்.
புதுச்சேரி நகராட்சி சட்டத்தின் கீழ் பொதுமக்கள் தாமாக முன் வந்து வரியை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாதபட்சத்தில் அவ்வரியை நிலுவை தொகையாக கருதி 10 சதவீதம் வரை வட்டி விதிப்பதற்கு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சொத்து வரி விதிப்பு பதிவேட்டில் விடுபட்டுள்ள கட்டடங்கள், புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகியவற்றிற்கு சொத்துவரி விதிக்கும் பொருட்டு, சொத்து வரி உரிமையாளர்கள் நகராட்சி ஆணையருக்கு எழுத்து பூர்வாக கடிதத்துடன் உரிய ஆவணங்களை உடனே சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.