ADDED : ஆக 01, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சீனாவில் நடைபெறும் 9வது உலக யூத் பிரான்ஸ் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சீனாவில் நாளை (3ம் தேதி) முதல் 8ம் தேதி வரை நடைபெறும் போட்டியில், புதுச்சேரியை சேர்ந்த பிரிட்ஜ் கேம் வீரர்கள் ரோஷன், சுந்தரம் ஆகியோர் யு.16 பிரிவிலும், விக்னேஸ்வரன் யு.26 பிரிவிலும் பங்கேற்கின்றனர். இவர்கள் கவர்னர் கைலாஷ்நாதனை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது, பிரிட்ஜ் சங்க பயிற்சியாளர் சங்கரன், தலைவர் கோப்பெருந்தேவி, அமைப்பாளர் சண்முகம், செயலாளர் குமார், உறுப்பினர்கள் லட்சுமி நாராயணன், ராஜாராம், வெண்மணி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
