UPDATED : ஆக 01, 2026 07:07 PM
ADDED : ஆக 01, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி சார்பில், இலவச இந்திய மருந்துவ முகாம் (2ம் தேதி) நடக்கிறது.
பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி சார்பில், (2ம் தேதி) இலவச இந்திய மருத்துவ முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் முகாமில், சென்னை பூந்தமல்லி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையிலிருந்து, அனுபவம் வாய்ந்த அனைத்து துறை பேராசிரிய மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்கின்றனர்.
இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு, பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யாதவர்கள், நேரடியாக வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
