/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் கண்டக்டருக்கு 20 ஆண்டு சிறை புதுச்சேரி போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
/
பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் கண்டக்டருக்கு 20 ஆண்டு சிறை புதுச்சேரி போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் கண்டக்டருக்கு 20 ஆண்டு சிறை புதுச்சேரி போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் கண்டக்டருக்கு 20 ஆண்டு சிறை புதுச்சேரி போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
ADDED : மே 21, 2024 04:48 AM

புதுச்சேரி: திருமண ஆசை காட்டி பிளஸ் 2 மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த கண்டக்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
கடலுார் அடுத்த கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் பாபு,29; தனியார் பஸ் கண்டக்டர். இவருக்கு திருமணமாகி 7 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ள நிலையில், குடும்ப பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றார். அதனைத் தொடர்ந்து பாபு, மதுரப்பாக்கத்தை சேர்ந்த பெண்ணை 2ம் திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார்.
இந்நிலையில் பாபு, தான் வேலை செய்யும் பஸ்சில் தினசரி பள்ளிக்கு சென்று வந்த புதுச்சேரியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அவருடன் பழகி வந்தார்.
அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி, என்னுடன் வந்தால் திருமணம் செய்து கொள்கிறேன். இல்லை என்றால் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வௌியிட்டு விடுவேன் என மிரட்டி, கடந்தாண்டு பிப்ரவரி 18ம் தேதி மாணவியை கீழ்பாதி கிராமத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் காலை உனக்கு 18 வயது ஆகவில்லை. 2 ஆண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளவதாக கூறி நோணாங்குப்பம் பாலம் அருகே சிறுமியை விட்டு விட்டு சென்றார்.
ஏமாற்றப்பட்டதை அறிந்த சிறுமி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாபுவை கைது செய்த அரியாங்குப்பம் போலீசார், அவர் மீது புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சோபனாதேவி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாபுவிற்கு, போக்சோ பிரிவில் 20 ஆண்டு சிறை தண்டனையும், கட்டாயப்படுத்தி சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.

