/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை டைலருக்கு 3 ஆண்டு கடுங்காவல் புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

ADDED : ஆக 15, 2024 04:41 AM
புதுச்சேரி: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டைலருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி விரைவு கோர்ட் தீர்ப்பு அளித்தது.
புதுச்சேரியை சேர்ந்த 12 வயது சிறுமி தனது தாயுடன் கடந்த 2020 ஆண்டு செப்., 28ம் தேதி திருக்கனுார் கடை வீதியில் உள்ள ஜவுளி கடைக்கு சென்றார். கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சிறுமி துணி பையுடன் கடைக்கு வெளியில் காத்திருந்தார். அவரது தாய் கடைக்குள் சென்று புதிய துணிகள் வாங்கி கொண்டிருந்தார்.
ஜவுளி கடைக்கு எதிரில் டெய்லர் கடை நடத்தி வரும் விக்கரவாண்டி அடுத்த ராதாபுரத்தை சேர்ந்த கந்தன்,52; சிறுமிக்கு உதவுவதாக கூறி, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
சிறுமியின் தாய் அளித்த புகாரின் கந்தனை கைது செய்த திருக்கனுார் போலீசார், அவர் மீது புதுச்சேரி கோர்ட்டில் போக்சோ பிரிவில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த போக்சோ விரைவு கோர்ட் நீதிபதி சுமதி, கந்தனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.