/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அரசியல் பிரமுகர்கள் 'டூர்' நிர்வாகிகளையும் குஷிப்படுத்த ஏற்பாடு
/
புதுச்சேரி அரசியல் பிரமுகர்கள் 'டூர்' நிர்வாகிகளையும் குஷிப்படுத்த ஏற்பாடு
புதுச்சேரி அரசியல் பிரமுகர்கள் 'டூர்' நிர்வாகிகளையும் குஷிப்படுத்த ஏற்பாடு
புதுச்சேரி அரசியல் பிரமுகர்கள் 'டூர்' நிர்வாகிகளையும் குஷிப்படுத்த ஏற்பாடு
ADDED : ஏப் 28, 2024 03:40 AM
லோக்சபா தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல், கடந்த 20ம் தேதி துவங்கியது. இறுதி வேட்பாளர் பட்டியல், 30ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, தேர்தல் பிரசாரம் துவங்கியது.
முதல்கட்ட தேர்தலில் ஓட்டுப் பதிவுக்கு குறுகியகால அவகாசமே இருந்ததால், அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டி போட்டு பிரசாரம் மேற்கொண்டனர்.
சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.
18 நாட்களாக நடந்த பிரசாரம் ஓய்ந்து, கடந்த 19ம் தேதி ஓட்டுப் பதிவு நடந்தது. தொடர்ந்து, ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை, வரும் 4ம் தேதியன்று நடக்க உள்ளது.
ஓட்டு எண்ணிக்கைக்கு நீண்ட நாட்கள் உள்ளதால், தேர்தலில் பணியாற்றி களைத்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளனர். பலர் தங்களது நண்பர்களுடன் சென்றுள்ளனர்.
மேலும், தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் குஷிப்படுத்தும் வகையிலும் அரசியல் கட்சியினர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதன்படி, மலைவாச ஸ்தலங்களுக்கு இளைஞர்கள் படையெடுத்துள்ளனர். நடுத்தர வயதினர் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர்.
இதனால், தேர்தல் பரபரப்பு ஓய்ந்து புதுச்சேரி வெறிச்சோடி கிடக்கிறது.

