யோகா போட்டியில் புதுச்சேரி மாணவரும் சாம்பியன் பட்டம்
யோகா போட்டியில் புதுச்சேரி மாணவரும் சாம்பியன் பட்டம்
ADDED : ஜூன் 28, 2026 03:52 PM
புதுச்சேரி: காஞ்சிபுரம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் யோகா மையம் சார்பில், நடந்த 19வது அகில இந்திய அளவிலான யோகா போட்டியில் புதுச்சேரி மாணவர் சாம்பியன் பட்டம் வென்றார்.
காஞ்சிபுரம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் யோகா மையம் சார்பில், 19வது அகில இந்திய அளவிலான யோகா போட்டி சங்கர கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் நடந்தது.
இப்போட்டிகளில் புதுச்சேரி முதலியார்பேட்டை பீஸ் மற்றும் யோகா சென்டர் மாணவர் தருண்ராஜ் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதேபோல், ஆண்கள் பிரிவில், இரண்டாம் இடத்தை அகில்யோகன், பெண்கள் பிரிவில், தேவஸ்ரீ வென்றுள்ளனர்.
மொத்தமுள்ள நான்கு சாம்பியன்ஷிப் பட்டத்தில், மூன்றினை பீஸ் மற்றும் யோகா சென்டர் மாணவர்கள் வென்றனர். மேலும், இம்மையத்தின் சார்பில், பல்வேறு பிரிவுகளில், நடந்த போட்டிகளில், கலந்து கொண்டு, முதல் பரிசினை மாணவர் அஜய்யோகன், அகில்யோகன், தருண்ராஜ், தேவஸ்ரீ, அங்காளம்மாள், துளசிதாஸ் ஆகியோரும், இரண்டாம் பரிசினை கிரிதிக், பிரபஞ்சன், சித்து, சீனுவாசன் ஷாலினி பெற்றனர்.
சாய் நிகிதா, பிரிஷாதேவா லோகந்திரா ஆகியோர் மூன்றாம் பரிசினைப் பெற்றனர். இப்பபோட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 800 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்கரமட யோக ஆசிரியர் சத்யநாராயணன் செய்திருந்தார்.
