/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி வாலிபர் இறப்பு; முதல்வரிடம் இந்திய கம்யூ., முறையீடு

ADDED : மே 04, 2024 07:12 AM

புதுச்சேரி : உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி வாலிபர் இறப்பு விவகாரத்தில் தமிழக அரசிடம் பேசி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னையில் உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சையின்போது புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு காரணமான மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசிற்கு புதுச்சேரி அரசின் சார்பில், வலியுறுத்த வேண்டும் என இந்திய கம்யூ., வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக, முதல்வர் ரங்கசாமியை இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மாநில துணை செயலாளர் சேது செல்வம், ஏ.ஜ.டி.யூ.சி., தொழிற்சங்க மூத்த தலைவர் அபிஷேகம், கலை இலக்கிய பெருமன்ற சிவக்குமார் மற்றும் பெற்றோர் துரைசெல்வம் - ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று சட்டசபையில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.
இது குறித்து தமிழக அரசுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.