/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வதேச போட்டியில் வெற்றிகளை குவிக்கும் புதுச்சேரி டென்னிஸ் பால் கிரிக்கெட் வீரர்கள்
/
சர்வதேச போட்டியில் வெற்றிகளை குவிக்கும் புதுச்சேரி டென்னிஸ் பால் கிரிக்கெட் வீரர்கள்
சர்வதேச போட்டியில் வெற்றிகளை குவிக்கும் புதுச்சேரி டென்னிஸ் பால் கிரிக்கெட் வீரர்கள்
சர்வதேச போட்டியில் வெற்றிகளை குவிக்கும் புதுச்சேரி டென்னிஸ் பால் கிரிக்கெட் வீரர்கள்
ADDED : செப் 05, 2024 05:20 AM
புதுச்சேரி: சர்வதேச அளவில் நடக்கும் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் புதுச்சேரி வீரர்கள் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் டென்னிஸ் பால் கிரிக்கெட் கடந்த 2000ம் ஆண்டு துவங்கப்பட்டது. பல ஆண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம், டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியை மத்திய அரசும், புதுச்சேரி அரசும் அங்கீகரித்தது.
அதன் பின்பு சர்வதேச அளவிலான போட்டிகள் மற்றும் நாடு முழுதும் நடந்த தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
கடந்த 2021 டிச., மாதம் உத்தரபிரதேசத்தில் நடந்த சப்ஜூனியர் தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி 3வது இடமும், 2022 பிப்., மாதம் சென்னையில் நடந்த சப்ஜூனியர் போட்டியிலும் 3வது இடம், நவ., மாதம் கேரளா பாலாக்காட்டில் நடந்த சீனியர் தென் மண்டபல அளவிலான போட்டியில் ஆண்கள் அணி 2வது இடம் பிடித்தது.
2023 ஜனவரி மாதம் ஆந்திரா ஓங்கோலில் நடந்த போட்டியில் 2வது இடமும், ஆக., மாதம் இமாச்சலபிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் 2வது இடம், நவ., மாதம் ஜம்மு காஷ்மீரில் நடந்த ஜூனியர் தேசிய போட்டியில் பெண்கள் அணி 3வது இடமும், ஜனவரி மாதம் உத்தரகாண்ட் ருத்ரப்பூரில் நடந்த தேசிய போட்டியில், புதுச்சேரி சிறுமியர் அணி 3வது இடம் பிடித்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சேலத்தில் நடந்த தென் மண்டல அளவிலான போட்டியில், புதுச்சேரி சிறுவர் அணி முதலிடம் பிடித்தது. பிப்., மாதம் கேரளா பாலக்காட்டில் நடந்த தென் மண்டல ஜூனியர் போட்டியில் புதுச்சேரி சிறுவர் அணி 3வது இடமும், சிறுமியர் அணி 2வது இடம்பிடித்தனர்.
மார்ச் மாதம் ராமநாதபுரத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் சீனியர் 3வது இடமும், மே மாதம் கோவாவில் நடந்த ஆல் இந்தியா இன்டர்சோனல் போட்டியில் புதுச்சேரி சிறுவர் சிறுமியர் அணி 2வது இடம் பிடித்தனர். ஆந்திரா அனந்தபூரில் நடந்த தென் மண்டல போட்டி, ஜிப்மரில் நடந்த தென் மண்டல போட்டியில் புதுச்சேரி அணி 3வது இடம் பிடித்தது.
புதுச்சேரி டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்க செயலாளர் ரத்தின பாண்டியன் கூறுகையில்;
'கடந்த 2022ல் நேபாளம் பொக்ராவில் நடந்த ஆசியா டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தங்க பதக்கம் வென்றது. இந்திய அணியில் புதுச்சேரி வீரர்கள் இருவர் பதக்கம் பெற்றனர். அக்., ல் இலங்கை கொழும்புவில் நடந்த இந்தோ - ஸ்ரீலங்கா இன்டர்நேஷ்னல் போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணி தங்கம் வென்றது. இரு அணியிலும் தலா 3 புதுச்சேரி வீரர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு டிச.,ல் பூட்டான், ஜெய்க்கான் என்ற இடத்தில் நடந்த இண்டோ - பூட்டான் இன்டர்நேஷ்னல் போட்டியில், இந்திய அணி தங்கம் வென்றது. இதிலும் புதுச்சேரி வீரர்கள் 2 பேர் பங்கேற்றனர்.
கடந்த ஜன., நேபாளம், பொக்ராவில் நடந்த 2வது ஆசியா டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியிலும், இந்திய அணி சீனியர் மற்றும் ஜூனியர் அணிகள் தங்க பதக்கம் வென்றது.
இதில் சீனியர் ஆண்கள், பெண்கள் பிரிவிலும் புதுச்சேரி வீரர்கள் 6 பேர் பங்கேற்று பதக்கம் வென்றனர். ஜூனியர் பிரிவிலும் 6 பேர் தங்கம் வென்றனர்.
சிங்கப்பூரில் நடந்த இண்டோ - சிங்கப்பூர் இன்டர்நேஷ்னல் போட்டியில், இந்திய அணி தங்கம் வென்றது. இதில், புதுச்சேரி வீரர்கள் மூவர் பங்கேற்று பதக்கம் வென்றனர்' என்றார்.