/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புட்டலாய் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
புட்டலாய் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 22, 2024 05:34 AM

வில்லியனுார்: ஆரியப்பாளையம் புட்டலாய் மாரியம்மன் ஆலய கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் கிராமத்தில் அமைத்துள்ள புட்டலாய் மாரியம்மன் கோவிலில் பொய்யாமொழி விநா யகர், கெங்கையம்மன், எல்லையம்மன், பால விநாயகர், பாலமுருகன், தஷ்ணாமூர்த்தி, துர்க்கையம்மன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி அமைத்துள்ளனர்.
இக்கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 19ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்து வந்த விழாவில் நேற்று காலை 6:00 மணியளவில் நான்காம் கால பூஜை, 8:45 மணியளவில் யாத்ராதானம் மற்றும் கடம் புறப்பாடு, காலை 9:05 மணியளவில் பொய்யாமொழி விநாயகருக்கு மகா கும்பாபிேஷகம், காலை 9:15 மணியளவில் கெங்கையம்மனுக்கும், 9:35க்கு எல்லையம்மனுக்கும், 10:05க்கு புட்டலாய் மாரியம்மனுக்கும் மகா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது.
அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலையில், திருக்காஞ்சி கோவில் தலைமை குருக்கள் சரவணன் சிவாச்சார்யர் தலைமையில் சிவாச்சார்யர்கள் கும்பாபிேஷகத்தை நடத்தினர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.

