/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிகரெட் கடன் தராததால் ஆத்திரம்; கடை முன் பெட்ரோல் குண்டு வீச்சு
/
சிகரெட் கடன் தராததால் ஆத்திரம்; கடை முன் பெட்ரோல் குண்டு வீச்சு
சிகரெட் கடன் தராததால் ஆத்திரம்; கடை முன் பெட்ரோல் குண்டு வீச்சு
சிகரெட் கடன் தராததால் ஆத்திரம்; கடை முன் பெட்ரோல் குண்டு வீச்சு
ADDED : செப் 11, 2024 11:24 PM
அரியாங்குப்பம் : சிகரெட் கடன் தராததால் பெட்டி கடையில் பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி புகழரசி, 43. இவர் அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலையில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.
சிங்கிரிகுடி பகுதியை சேர்ந்த கிரேஷ், 25; பிரவின், 27; சகோதரர்கள் இருவரும் கடந்த 7ம் தேதி பெட்டி கடைக்கு சென்று, புகழரசியிடம் சிகரெட் கடனாக கேட்டனர். அவர் தராததால், ஆத்திரமடைந்த, இருவரும் நேற்று பூட்டியிருந்த பெட்டி கடை வாசலில், பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றனர்.
கடை முன்பு தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் குண்டை அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுகுறித்து, புகழரசி கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, கிரேஷ், பிரவின் ஆகியோரை கைது செய்தனர்.