ADDED : மே 04, 2024 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தினமலர் செய்தி எதிரொலியால் ரயில் நிலையத்தில் பூட்டி கிடந்த கழிவறைகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் இரண்டு இடங்களில் கட்டண கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை யாரும் டெண்டர் எடுக்க முன் வராததால் பூட்டியே கிடந்தது.
ரயில்கள் வரும்போது மட்டும் சில மணி நேரங்கள் கழிவறைகள் திறக்கப்படும். அதன் பிறகு பூட்டியே கிடக்கும். இதனால், பயணிகள் அவதியடைந்தனர்.
இதனை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் நேற்று வெளியானது. அதை தொடர்ந்து ரயில் நிலையத்தில் உள்ள கழிவறை நேற்று பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.