/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி வந்த ராஜிவ் ஜோதி யாத்திரை காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு
/
புதுச்சேரி வந்த ராஜிவ் ஜோதி யாத்திரை காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு
புதுச்சேரி வந்த ராஜிவ் ஜோதி யாத்திரை காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு
புதுச்சேரி வந்த ராஜிவ் ஜோதி யாத்திரை காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு
ADDED : மே 21, 2024 05:13 AM

புதுச்சேரி: புதுச்சேரி வந்த ராஜிவ் ஜோதி யாத்திரை நேற்று வழியனுப்பி வைக்கப்பட்டது.
ராஜிவ் நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு சார்பில் ராஜிவ்காந்தி ஜோதி யாத்திரை நடந்து வருகின்றது. இந்த ஆண்டு யாத்திரை கடந்த 15ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் துவங்கியது. யாத்திரையை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
யாத்திரை பெங்களூருவில் தொடங்கி, மாண்டியா, மைசூரு, கோயம்புத்துார், பாலக்காடு, திருச்சூர், கொச்சின், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக நேற்று புதுச்சேரியை அடைந்தது. புதுச்சேரிக்கு வந்த யாத்திரைக்கு ஐ.என்.டி.யூ.சி., மாநில தலைவர் பாலாஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜோதியாத்திரையை ஸ்ரீபெரும்புதுாருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி, ரெட்டியார்பாளையம் ஐஸ்வர்யம் கிராண்ட் ஹோட்டலில் நேற்று நடந்தது.மாநில ஐ.என்.டி.யூ.சி., தலைவர் பாலாஜி தலைமை வகித்தார்.
மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், பாலன்,பொது செயலாளர் சங்கர்,மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு உள்ளிட்டோர் ஜோதி யாத்திரையை வழியனுப்பி வைத்தனர்.

