/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கசிவால் ராஜிவ் சிக்னல்கள் பழுது போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் போலீஸ் திணறல்

ADDED : மே 24, 2024 03:56 AM

புதுச்சேரி: மின் கசிவால் ராஜிவ் சிக்னல்கள் அனைத்தும் எரிந்து பழுதானதால், போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
தட்டாஞ்சாவடி ராஜிவ் சிக்னல் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. கோரிமேடு, வழுதாவூர், நுாறடிச்சாலை, இ.சி.ஆர்., காமராஜர் சாலை என 5 சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதி என்பதால், டிராபிக் ஜாமிற்கு பஞ்சமில்லை.
ஒவ்வொரு நிமிடமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சாலையை கடந்து செல்கிறது. இங்குள்ள சிக்னல் சிலதினங்களுக்கு முன்பெய்த லேசான மழையில் ஏற்பட்ட மின்கசிவால் எரிந்து பழுதானது. இதனால் 5 சாலைகளில் ஏற்படும் டிராபிக்கை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
புதுச்சேரியில் ஏற்கனவே உள்ள 27 டிராபிக் சிக்னல்களை மாற்றி புதிதாக அமைக்கவும், கூடுதலாக 9 சிக்னல் அமைக்க ரூ.3 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு டெண்டர் விடும் பணி நடக்கிறது. இதனால், பழுதான சிக்னல்களை சரிசெய்ய முடியாத நிலை உள்ளது.
சிக்னல் பழுது, சாலையில் பெயிண்ட் பூசுதல், எச்சரிக்கை பலகை அமைக்க போக்குவரத்து எஸ்.பி.க்கு ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் சிக்னல்பழுதுகளை, அந்தந்த போக்குவரத்து போலீசார் சரிசெய்ய வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வடக்கு போக்குவரத்து போலீசார் சிக்னல் பழுதை சரி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.