நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 24ம் தேதி துவங்கியது. கடந்த 27ம் தேதி அர்ஜூனன் - திரவுபதி திருக்கல்யாணம் உற்சவம், 28ம் தேதி கூத்தாண்டவர் திருக்கல்யாண உற்சவம், 29ம் தேதி தேர் திருவிழா, 31ம் தேதி தீமிதி திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் திரவுபதியம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. நேற்று இரவு ராமர் பட்டாபிேஷகம் மற்றும் நிறைவு விழா நடந்தது.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் தனபூபதி மற்றும் மடுகரை கிராம மக்கள் செய்திருந்தனர்.