UPDATED : மே 13, 2026 05:38 PM
ADDED : மே 13, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ரங்கசாமிக்கு, பா.மக., நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் 5வது முறையாக புதுச்சேரி பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, ரங்கசாமி தலைமையில் அமைய உள்ள அரசு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றவும், புதுச்சேரி மாநில மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சமூக நீதியை தொடர்ந்து நிலைநாட்டவும் அவரது நல்லாட்சி சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
