/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
/
ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
ADDED : ஏப் 12, 2024 04:30 AM

புதுச்சேரி : சென்னை ராமகிருஷ்ண மடத்தின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும், கருவடிக்குப்பம் ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு, புதுச்சேரி அரசு செயலர் ஜெயந்தகுமார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் கணேசன் வரவேற்றார்.
புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் பொறுப்பாளர் சுவாமி நித்யேஷ்நந்த மகராஜ் முன்னிலை வகித்தார். புதுச்சேரி ரோட்டரி சங்கம் மிட்டவுன் தலைவர் கிருஷ்ணராஜூ, ராமகிருஷ்ண சேவா சங்கத்தின் செயலாளர் சுரீந்தர், பள்ளி இயக்குனர் நடனசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் ராமகிருஷ்ண சேவா சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ண சிங், பொருளாளர் முத்துராமன். இணைசெயலாளர் சுவாமிநாதன், மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்களும், ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில், 2023-2024ம் கல்வியாண்டில் கல்வியில் முன்னிலை வகித்த மாணவர்களுக்கு தகுதி சான்றிதழும், வருகை பதிவிற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஏற்பாடுகளை இயக்குனர் நடனசபாபதி, துணை முதல்வர் சுந்தரமூர்த்தி, தலைமை ஆசிரியை ஜாஸ்மின் ஆகியோர் செய்திருந்தனர்.
பள்ளி நிர்வாக அதிகாரி ஸ்ரீராமுலு நன்றி கூறினார்.

