/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலியார் சமூகத்தினரை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் ராமலிங்கம் கோரிக்கை
/
முதலியார் சமூகத்தினரை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் ராமலிங்கம் கோரிக்கை
முதலியார் சமூகத்தினரை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் ராமலிங்கம் கோரிக்கை
முதலியார் சமூகத்தினரை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் ராமலிங்கம் கோரிக்கை
ADDED : ஆக 02, 2024 01:20 AM
புதுச்சேரி: 'முதலியார் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்' என, ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேசினார்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேசியதாவது; புதுச்சேரிக்கு மத்திய அரசு 271 கோடி கூடுதலாக வழங்கியதிற்கு கவர்னருக்கு நன்றி.
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தலா ரூ. 6500 வீதம் 18,562 குடும்பத்திற்கு ரூ. 12.6 கோடி வழங்கப்பட்டுள்ளது. தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக விரிவாக்கம், பெரியகாலாப்பட்டு, நல்லவாடு மீன் இறங்கு மையத்திற்கு ரூ. 92.47 கோடி ஒதுக்கி பணிகள் துவங்கியதற்கு பாராட்டுகள்.
மற்ற மாநிலத்தைவிட புதுச்சேரி அரசு மருத்துவமனை செயல்பாடு சிறப்பாக உள்ளது. பிரதமர் கூறியதுபோல் கல்வித்துறையில் பெஸ்ட் புதுச்சேரியாக இருப்பதை மறுக்க முடியாது.
புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என 100 கல்லுாரிகள் உள்ளது. 126 அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ.,யாக மாற்றப்பட்டதை வரவேற்கிறோம்.
முதலியார், கருணிகர் ஆகிய சாதிகளை மத்திய ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் என, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரிடம் அங்காளன் எம்.எல்.ஏ., மனு தந்துள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.
புதுச்சேரியில் முதலியார் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
தேசிய விளையாட்டு போட்டிக்கு செல்லும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு அரசு உதவி செய்வது கிடையாது.
ரயில் வசதி, கட்டண வசதிகளை அரசு ஏற்று கொண்டால், போட்டிகளில் சாதிப்பர் என பேசினார்.