/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமானுஜரின் 1007வது அவதார நாளையொட்டி உள்புறப்பாடு
/
ராமானுஜரின் 1007வது அவதார நாளையொட்டி உள்புறப்பாடு
ADDED : மே 13, 2024 05:10 AM

புதுச்சேரி: ராமானுஜரின் 1007வது அவதாரத் திருநாளையொட்டி உள்புறப்பாடு நடந்தது.
புதுச்சேரி செயின்ட் தெரஸ் வீதியில் அமைந்துள்ள அரங்க ராமானுஜர் பஜனை மடம் ஸ்ரீதேவி பூதேவி சமேத அனந்தரங்க நாதர் சன்னதியில் ராமானுஜரின் 1007வது அவதாரத் திருநாள் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி கடந்த 3ம் தேதி முற்று ஓதுதல் நிகழ்ச்சி துவங்கியது.தொடர்ந்து 10 நாட்களாக நாலாயிரத் திவ்ய பிரபந்தம், பன்னிரு ஆழ்வார்கள் அருளிய முற்று ஓதுதல் நிகழ்ச்சி நடந்து வந்தது.
ஒவ்வொரு நாளும் நான்காயிரம் பாடல்கள் ஆழ்வார் கோஷ்டியினர் லட்சுமி நாராயணன், தேவநாதன் தலைமையில் பாடப்பட்டது. நேற்று கடைசி நான்காயிரம் பாடல்கள் பாடப்பட்டு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் கோலாகலமாக நடந்தது.
தொடர்ந்து புதுச்சேரி திருஅருளிச்செயல் கோஷ்டியினர் முன்னிலையில் ராமானுஜரின் உருவச்சிலை உள்புறப்பாடு செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் மகேஷ், சுரேஷ் குமார் சார்பில் நடந்தது. ஏற்பாடுகளை அரங்க ராமானுஜர் பஜனைமடம் சிறப்பு அதிகாரி அன்பு செல்வன் தலைமையில் தேவநாதன் பாகவதர், பாலாஜி,கனேஷ், ராஜி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.