/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தல் முடித்தவுடன் ரங்கசாமி முதல்வராக இருக்க மாட்டார்: முன்னாள் முதல்வர் கணிப்பு
/
லோக்சபா தேர்தல் முடித்தவுடன் ரங்கசாமி முதல்வராக இருக்க மாட்டார்: முன்னாள் முதல்வர் கணிப்பு
லோக்சபா தேர்தல் முடித்தவுடன் ரங்கசாமி முதல்வராக இருக்க மாட்டார்: முன்னாள் முதல்வர் கணிப்பு
லோக்சபா தேர்தல் முடித்தவுடன் ரங்கசாமி முதல்வராக இருக்க மாட்டார்: முன்னாள் முதல்வர் கணிப்பு
ADDED : ஏப் 01, 2024 06:32 AM
புதுச்சேரி : லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் பேசியதாவது: லோக்சபா தேர்தலில் பொதுமக்கள் யார் வரக்கூடாது, எந்த கட்சி ஆட்சி செய்யக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். பா.ஜ., வேட்பாளர் தேர்தல் துறையிடம் கணக்கு காட்டியுள்ள சொத்துக்கள் ரூ. 1000 கோடிக்கு மேல் இருக்கும். அதனை குறைத்து ரூ. 10 கோடியாக கணக்கு காட்டி உள்ளார்.
பிரதமர் மோடி வழங்கும் அரிசி மட்டும் மக்களுக்கு செல்ல வேண்டும். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வழங்கும் அரிசி மட்டும் மக்களுக்கு செல்லகூடாது என்பது சரியில்லை.
மாநில அந்தஸ்து, ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் .சட்டம்- ஒழுங்கு கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்க வேண்டும். புதுச்சேரி மாநில அரசின் கடனை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
பா.ஜ., வேட்பாளர் எங்களுடைய அரசியல் விரோதி அல்ல துரோகி. தற்போதிய லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு ரங்கசாமி முதல்வராக இருக்க மாட்டார். பா.ஜ., என்.ஆர்.காங்., கட்சியை முழுமையாக முழுங்கிவிடும். ரங்கசாமிக்கான காலக்கெடு மூன்று மாதம் தான். பா.ஜ., கூட்டணி கட்சிகளை விட்டு வைக்காது. ஆகையால், ரங்கசாமி விழிப்பாக இருக்க வேண்டும்.
இந்த நமச்சிவாயமே ஆட்சியை கவிழ்ப்பார், கூட இருந்து குழி பறிப்பது தான் அவருடைய வேலை. ஆகையால், ரங்கசாமி மிகவும் பாதுகாப்பான யோசனை செய்து செயல்பட வேண்டும். என்றார்.

