/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'காங்., ஆட்சியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டன: மதுக் கடைகளுக்கு அனுமதி தரப்பட்டது' முதல்வர் ரங்கசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

ADDED : ஏப் 17, 2024 11:46 PM

புதுச்சேரி,: காங்., ஆட்சியில் தான் ரேஷன் கடைகள் மூடப்பட்டன. மதுக்கடை திறக்க கேபினட்டில் அனுமதி தரப்பட்டது என, முதல்வர் ரங்கசாமி குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி நேற்று இறுதி கட்ட பிரசாரம் செய்தார்.
கதிர்காமம் தொகுதியில் ரமேஷ் எம்.எல்.ஏ., இந்திரா நகர் தொகுதியில் ஆறுமுகம் எம்.எல்.ஏ.,தலைமையில் தொண்டர்கள் பைக்கில் ஊர்வலமாக வந்தனர். பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோவிலில் இருந்து பிரசாரத்தை துவங்கிய முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
கண்டிப்பாக ரேஷன் கடைகளை திறந்து அரிசி விநியோகிக்கப்படும். காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றால், வெள்ளை அரிசி வழங்கப்படும் என்கிறார். அவர்கள் மாநிலத்தில் ஆட்சியில் இல்லாத நிலையில், எப்படி அதை செயல்படுத்த முடியும். அவர், 5 ஆண்டுகளாக எம்.பி.,யாக இருந்ததால் மாநிலத்துக்கு என்ன நன்மை என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
கடந்த காங்., ஆட்சியில் கவர்னர் கிரண்பேடி - ஆட்சியாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டன. தரமற்ற அரிசி விநியோகித்ததாக புகார் எழுந்ததால்,அரிசிக்குப் பதில் பணம் வழங்கப்பட்டது.அதன் அடிப்படையில் தானே ரேஷன் கடைகளும் மூடப்பட்டன.
தனியார் மதுக்கடைகள், அதிகளவு துவங்கவும் காங்., ஆட்சியில் தான் கேபினட்டில் அனுமதிக்கப்பட்டது. மது உற்பத்திக்கும் காங்., ஆட்சியில் தான் அனுமதி தர முடிவு எடுக்கப்பட்டது.
மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைய உள்ள நிலையில், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற்றால் தான், நமது மாநிலத்துக்கு நன்மை கிடைக்கும். எனவே, புதுச்சேரி மாநில நலன் கருதி பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.