/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடைகள் திறக்கப்படும்; காங்., வைத்திலிங்கம் உறுதி
/
ரேஷன் கடைகள் திறக்கப்படும்; காங்., வைத்திலிங்கம் உறுதி
ரேஷன் கடைகள் திறக்கப்படும்; காங்., வைத்திலிங்கம் உறுதி
ரேஷன் கடைகள் திறக்கப்படும்; காங்., வைத்திலிங்கம் உறுதி
ADDED : ஏப் 17, 2024 12:24 AM

அரியாங்குப்பம் : காங்., ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகளை திறந்து, அரசி வழங்கப்படும் என, வேட்பாளர் வைத்திலிங்கம் உறுதியளித்தார்.
புதுச்சேரி காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் நேற்று மாலை மணவெளி தொகுதியில் ஓட்டு சேகரித்தார். அவருக்கு அரியாங்குப்பத்தில் காங்., தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். ஓட்டு சேகரிப்பின் போது, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் உட்பட, கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வேட்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில், பிரதமர் மோடி 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக கூறினார். இதுவரை, ஒருவருக்கு கூட வேலை வழங்கவில்லை. வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என கூறினார். இதுவரை உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதா என்றால் இல்லை.
மக்கள் ஏழையாகவே மட்டும் இருக்கின்றனர். மோடி மட்டுமே வளர்ந்துள்ளார். காங்., ஆட்சி அமைத்து, ராகுல் பிரதமரனால் காஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். இரண்டு மாதங்களில் 30 லட்சம் பேருக்கு வேலை தரப்படும். அதில், 50 சதவீத பெண்களுக்கு வேலை வழங்கப்படும். குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 8 ஆயிரத்து 500 பணம் வழங்கப்படும் என ராகுல் தேர்தலில் அறிக்கையில் கூறியுள்ளார். இத்திட்டம் புதுச்சேரியில் நிறைவேற்றபடும். மூடப்பட்ட, ரேஷன் கடையை திறந்து 20 கிலோ வெள்ளை அரிசி வழங்கப்படும்.
மத்தியில் மோடியும், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியும் மக்களை கெடுத்து கொண்டிருக்கின்றனர். மாற்றம் வேண்டும் என்றால், வரும் லோக்சபா தேர்தலில் கை சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும்.
இவ்வாறு, வைத்திலிங்கம் பேசினார்.

