/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விழுப்புரம் - புதுச்சேரி சாலை பணியை விரைந்து முடிக்க மத்திய அமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை
/
விழுப்புரம் - புதுச்சேரி சாலை பணியை விரைந்து முடிக்க மத்திய அமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை
விழுப்புரம் - புதுச்சேரி சாலை பணியை விரைந்து முடிக்க மத்திய அமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை
விழுப்புரம் - புதுச்சேரி சாலை பணியை விரைந்து முடிக்க மத்திய அமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை
ADDED : ஆக 09, 2024 04:40 AM
புதுச்சேரி: விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து அளித்த மனு விபரம்:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமான நகாய் மூலம் புதுச்சேரி - விழுப்புரம் இடையே நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பாரத்மாலா பரியோஜனா-1 திட்டத்தின் கீழ் நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்ட இந்த என்.எச்.,-45ஏ தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிந்துள்ளதாக ஒப்பந்ததாரர் அறிவித்துள்ளார்.
இதற்கான சான்றிதழை ஆணையமும் வழங்கியுள்ளதோடு, வாகனங்களை இயக்க தகுதியாக உள்ளதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கண்டமங்கலம் அருகே ரயில்வே மேம்பால 'ஸ்டீல் கிரிடர்' பணிக்காக கடந்த பிப்ரவரி 21ம் தேதி முதல் விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி மேம்பால பணி முடியும் வரை, நெடுஞ்சாலை மூடியே இருக்கும் என்றும், வாகனங்கள் மாற்று பாதையில் செல்லும் என்றும் நகாய் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
இதனால், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆறு மாதத்திற்கு முன் விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலை மூடப்பட்ட போதும், இதுவரை திறக்காததால் பொதுமக்கள் துயரத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனரிடம் நான் பேசியபோது, ரயில்வே மேம்பாலத்திற்கு ரயில்வே அதிகாரிகளின் அனுமதி கிடைக்கவில்லை என்றார்.
வாகன போக்குவரத்து தடை செய்துள்ள நிலையில், பொதுமக்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்து, சட்ட ஒழுங்கு பிரச்னை எழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.