/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் வாசிப்பு திருவிழா
/
அரசு பள்ளியில் வாசிப்பு திருவிழா
ADDED : மார் 06, 2025 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஜீவானந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் வாசிப்புத்திருவிழா, பெண்கள் தின விழா, ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு கல்வி தின விழா கொண்டாடப்பட்டது.
பொறுப்பு ஆசிரியர் கணேஷ் தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். மகளிர் நல மருத்துவர் நிர்மலா, சப் இன்ஸ்பெக்டர் வசந்தி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி, கோகுலன் கலைமாறன், குறிஞ்சி நகர் நலச்சங்க உறுப்பினர் வைத்தியலிங்கம் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் தமிழ்மலர் நன்றி கூறினார். ஆசிரியர் ராஜேஷ் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கோமதி, கன்னியம்மா செய்திருந்தனர்.