/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரவுடி ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை
/
ரவுடி ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை
ADDED : ஆக 26, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு பகுதி யில் ரவுடி ஊரில் நுழைய தடை விதிக்கக் கோரி, சப் கலெக்டருக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோபி, 40. ரவுடியான இவர் மீது அடிதடி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
தற்போது ஜாமினில் ஊருக்கு வந்துள்ள ரவுடி கோபியால் மண்ணாடிப்பட்டு பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவுகிறது.
ஆகையால், அவரை ஊருக்குள் நுழைய தடை விதிக்கக் கோரி, திருக்கனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார், சப் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.