ADDED : ஏப் 28, 2024 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறை சார்பில், 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது.
புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 4 இடங்களில் நடந்தது. உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், ஆண்களுக்கான கைப்பந்து, பளுதுாக்கும் போட்டி, கபடி நடந்தது.புதுச்சேரி பல்கலைக்கழக மைதானத்தில் கிரிக்கெட் போட்டியும், கதிர்காமம் அரசு பள்ளி வளாகத்தில் கோகோ போட்டி, அமலோற்பவம் பள்ளி வளாகத்தில் கேரம், சதுரங்கம், யோகா போட்டி நடந்தது. இப்போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடக்கிறது.

