/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிள்ளையார்குப்பம் சந்திப்பில் மின் கம்பங்கள் அகற்றம்
/
பிள்ளையார்குப்பம் சந்திப்பில் மின் கம்பங்கள் அகற்றம்
பிள்ளையார்குப்பம் சந்திப்பில் மின் கம்பங்கள் அகற்றம்
பிள்ளையார்குப்பம் சந்திப்பில் மின் கம்பங்கள் அகற்றம்
ADDED : மார் 07, 2025 04:40 AM
பாகூர் : பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவமனை சந்திப்பில், போக்குவரத்திற்கு இடையூராக இருந்த மின் கம்பங்களை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.
புதுச்சேரி - கடலுார் சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் விபத்துக்களை தடுக்கும் வகையில், பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவமனை சந்திப்பு பகுதியில் சிக்னல் அமைத்துள்ளனர். இந்த சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூராக இருந்த மின் கம்பங்களை அகற்றநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காட்டுக்குப்பம் மின் அலுவலக ஊழியர்கள், நேற்று மின் கம்பங்களை அகற்றி, மின் பாதையை சரி செய்தனர்.
கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சாலையோரம் இருந்த விளம்பர பலகை, வாகனங்களை அகற்றி, சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.