/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புவன்கரே வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: வியாபாரிகள் திடீர் மறியல்
/
புவன்கரே வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: வியாபாரிகள் திடீர் மறியல்
புவன்கரே வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: வியாபாரிகள் திடீர் மறியல்
புவன்கரே வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: வியாபாரிகள் திடீர் மறியல்
ADDED : செப் 14, 2024 05:59 AM
புதுச்சேரி: நெல்லித்தோப்பு புவன்கரே வீதியில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு இல்லாத வீதிகளே கிடையாது. நகர பகுதியில் 99 சதவீத வீதிகளில், சாலை மற்றும் சாலையோர பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து கடை அல்லது வீடு கட்டியுள்ளனர். இதனால் சாலையில் டிராபிக் ஜாம் ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற சப்கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை, நகராட்சி, போலீஸ், வருவாய்த்துறை இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
நேற்று காலை நெல்லித்தோப்பு புவன்கரே வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி., மூலம் இடித்து அகற்றப்பட்டது.
எந்த வித முன் எச்சரிக்கை இன்றி திடீரென ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறி வியாபாரிகள் சிலர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, முன் அறிவிப்பு செய்து ஆக்கிரமிப்பு அகற்றுங்கள் என தெரிவித்தனர். அதனை ஏற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
கால அவகாசம் அளித்த மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றம் பணி நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.