/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: புதுச்சேரி நகராட்சி அதிரடி
/
காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: புதுச்சேரி நகராட்சி அதிரடி
காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: புதுச்சேரி நகராட்சி அதிரடி
காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: புதுச்சேரி நகராட்சி அதிரடி
ADDED : மே 21, 2024 05:15 AM

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையிலான குழுவினர் காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
புதுச்சேரி நகர வீதிகள் வர்த்தக நிறுவனங்கள்,கடைகள் நிறைந்த சாலையாக உள்ளது.ஆனால் இச்சாலைகளில் வாகனங்களில் செல்வது சவாலாக மாறிவிட்டது. இது தொடர்பாகபுதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு புகார் சென்றது.
அதையடுத்து உள்ளாட்சி துறை இயக்குனர் சக்திவேல் உத்தரவின்பேரில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையிலான குழுவினர் திட கழிவு மேலாண்மை,சாலையோர ஆக்கிரமிப்பு குறித்து நேற்று அதிரடியாக காந்தி வீதியில் ஆய்வு நடத்தினர்.
கடைகளுக்கு வர்த்தக உரிமம் உள்ளதா என்று ஆவணங்களை பரிசோதனை செய்தனர். காந்தி வீதியில் நியூ மெடிக்கல் சென்டர் முதல் அதிதி ஓட்டல் வரை சாலையின் இருபுறங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றும்படி கடை உரிமையாளர்களிடம் எச்சரிக்கை செய்தனர்.
இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி கூறும்போது,காந்தி வீதியில் வரும் 22ம் தேதி மீண்டும் ஆய்வு நடத்தப்படும்.சாலை ஆக்கிரமிப்பு,நடைபாதை ஆக்கிரமிப்பு இருந்தால் அபராதம் விதிக்கப்படுவதோடு,கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.
அனைத்து வியாபாரிகளும் புதுச்சேரி நகராட்சியிடம் முறையாக வர்த்தக உரிமம் பெற வேண்டும்.அரசு இடத்தை ஆக்கிரமிக்காமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் திட கழிவு மேலாண்மை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது நகராட்சி செயற்பொறியாளர் சிவபால்ன,வருவாய் அதிகாரி- சதாசிவம்,வருவாய் அதிகாரி-2 பிரபாகர்,உதவி பொறியாளர் நமச்சிவாயம்,மருத்துவ அதிகாரி ஆர்த்தி உடனிருந்தனர்.

