/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
வில்லியனுார் மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வில்லியனுார் மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வில்லியனுார் மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : மே 30, 2024 04:37 AM

வில்லியனுார்: வில்லியனுார் மாட வீதிகளில் சாலையை ஆக்கிரமித்து கட்டிய கடைகளை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.
வில்லியனுார் வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாட வீதிகளில் சாலையை ஆக்கிரமித்து கடைகள், விளம்பர பேனர்கள் வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நடந்து வந்தது.
இது குறித்து வில்லியனுார் தெற்கு பகுதி சப் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதனை தொடர்ந்து சப் கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கொட்டாரு தலைமையில் தாசில்தார் சேகர், துணை தாசில்தார் நித்யானந்தம், பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் சாலைகள், வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜன், உதவி பொறியாளர் சீனுவாசன், இளநிலை பொறியாளர் குலோத்துங்கன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் காத்திகேயன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலையில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.