/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்தில் சிக்கிய லாரியை விடுவிக்க ரூ.8,000 வாங்கி ஏமாற்றிய நிருபர் கைது

ADDED : மே 15, 2024 01:13 AM

உளுந்துார்பேட்டை : விபத்து வழக்கில் சிக்கிய லாரியை விடுவித்து தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றிய நிருபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது லாரி, சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் அருகே பஸ் மீது உரசி விபத்தில் சிக்கியது. இதுகுறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். லாரி போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
லாரியை விடுவித்து செல்வதற்காக ராஜேஷ், திருநாவலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தபோது, அங்கு வந்த உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ்,51; தான் அருணை எக்ஸ்பிரஸ் நிருபர் எனக்கூறி பணம் கொடுத்தால் சிபாரிசு செய்து லாரியை விடுவித்து தருவதாக கூறினார்.
அதனை நம்பிய ராஜேஷ் ரூ.8,000 கொடுத்தார். ஆனால், செல்வராஜ் லாரியை விடுவிக்க முயற்சிக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.