/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கனகன் ஏரி சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
/
கனகன் ஏரி சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஏப் 26, 2024 05:27 AM

புதுச்சேரி: கதிர்காமம் கனகன் ஏரி சாலைப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தொழிற்சங்கத்தின் தலைவர் சங்கரன், செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கதிர்காமம் கனகன் ஏரி சாலை, வழுதாவூர் சாலை மற்றும் அஜீஸ் நகர் சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.இது பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், கதிர்காமம் மருத்துவமனைக்கு செல்வோர் என அனைவரும் பயன்படுத்தும் முக்கிய சாலையாகும்.
கடந்த 2 மாதங்களாக யாரும் செல்ல முடியாத நிலையில் இந்த சாலை அடைக்கப்பட்டு பணிகள் மந்தமாக நடக்கிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வியாபாரிகள் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிய போது, சாலைப் பணிகள் முடிய இன்னும் 6 மாதங்கள் வரை ஆகும் என்று கூறியுள்ளனர்.
இதனால், அந்தப் பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியுற்றனர்.
பொதுப்பணித்துறையின் அலட்சியப் போக்கை ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.புதுச்சேரி அரசும், பொதுப்பணித்துறையும் விரைந்து செயல்பட்டு கதிர்காமம் கனகன் ஏரி சாலைப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

