/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை இயக்குனராக நியமிக்க கோரிக்கை
/
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை இயக்குனராக நியமிக்க கோரிக்கை
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை இயக்குனராக நியமிக்க கோரிக்கை
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை இயக்குனராக நியமிக்க கோரிக்கை
ADDED : மார் 09, 2025 03:43 AM
புதுச்சேரி : முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறைக்கு, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை நிரந்தர இயக்குனராக நியமிக்க வேண்டும் என, வீரத் தாய்மார்கள் நலச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச் சங்கத்தின் தலைவர் மோகன், அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை:
நலச் சங்கத்தின் சார்பில், ஆண்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், அசோக் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறைக்கு, ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியை நிரந்தர இயக்குனராக நியமிக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளாக நடத்தாமல் இருக்கும் முப்படை நலவாரிய கூட்டத்தை நடத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.