தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டுமான தொழிலாளர் வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க கோரிக்கை

கட்டுமான தொழிலாளர் வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க கோரிக்கை

கட்டுமான தொழிலாளர் வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க கோரிக்கை


ADDED : ஆக 02, 2026 08:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 08:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநில கட்டக்கலை தொழிலாளர் சங்க மாநில மாநாடு, எல்லைப்பிள்ளைசாவடியில் நேற்று நடந்தது. அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். சங்க கவுர தலைவர் அபிேஷகம் சங்க கொடியேற்றினார். ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் தினேஷ்பொன்னையா மாநாட்டை துவக்கி  வைத்து பேசினார்.

பொதுச் செயலாளர் அந்தோணி சிறப்புரையாற்றினார். பொருளாளர் செல்வம், துணைத் தலைவர் மோதிலால், செயலாளர் மூர்த்தி வாழ்த்தி பேசினர். சங்க பொது செயலாளர் மாநாட்டு அறிக்கை சமர்ப்பித்தார்.

60 வயது முடிந்தவர்களில் விடுபட்டவர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித் தொகையாக ஆறு மாதங்களுக்கு 10 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். கட்டட தொழிலாளர் விபத்தில் இறந்தால், ரூ.5 லட்சம், இயற்கை மரணத்திற்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us