/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ தேர்வு முடிவை வௌியிட கோரிக்கை
/
மருத்துவ தேர்வு முடிவை வௌியிட கோரிக்கை
ADDED : மே 22, 2024 06:57 AM
புதுச்சேரி : மருத்துவ கல்லுாரி இறுதியாண்டு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாணவர்கள் -பெற்றோர்கள் நலச் சங்க தலைவர் பாலா, புதுச்சேரி பல்கலை துணை வேந்தர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்.
புதுச்சேரியில் இயங்கி வரும் மருத்துவக் கல்லுாரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்கள் தேர்வு எழுதி முடித்து 58 நாட்களாகியும் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் இதுவரை வௌியிடவில்லை. ஆனால், ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி கடந்த ஜனவரி 25ம் தேதி தேர்வை முடித்த நிலையில் 4 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் தேர்வுகளை நடத்தி முடித்து அதன் முடிவுகளை 21 நாட்களில் வௌியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி பல்கலையின் இந்த மெத்தன செயல் மருத்து மாணவர்களை பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. என தேர்வு முடிவுகளை உடனடியாக வௌியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

