போர்வீரர்கள் நினைவு வளாகத்தை சீரமைக்க முதல்வரிடம் கோரிக்கை
போர்வீரர்கள் நினைவு வளாகத்தை சீரமைக்க முதல்வரிடம் கோரிக்கை
ADDED : ஜூலை 26, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச்சங்கம் சார்பில், போர்வீரர்கள் நினைவு வளாகத்தை சீரமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்ன வளாகத்தில் கார்கில் வெற்றி தின விழா நேற்று நடந்தது.
விழாவில், பங்கேற்ற முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கத்தின் தலைவர் மோகன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து போதிய பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ள போர்வீரர்கள் நினைவுச் வளாகத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.
