ADDED : ஜூலை 26, 2026 06:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி எக்ஸ்சர்வீஸ் லீக்கின் 20வது பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
லாஸ்பேட்டை அசோக் நகர் சமுதாய நலகூடத்தில் நடந்த கூட்டத்திற்கு பரசிவம் வரவேற்றார். தலைவர் பெருமாள், சங்கம் செய்த சாதனைகள், பணிகளையும் பட்டியலிட்டார். உபதலைவர் ஜோதிகுமார் சிறப்புரையாற்றினார். பொருளார் மேனுவல்ராஜ் ஆண்டு வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.
பொது செயலாளர் தேவராஜீ, அடையாள அட்டை பெறுவதன் அவசியம் குறித்து விளக்கினார். சங்க உறுப்பினர்கள் கில்பர்ட், யுவநேரு, கார்த்திகேயன், பாஸ்கரன், கணேஷ் ஆகியோர் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, டாக்டர், பி.எச்டி., முடித்த முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரிபுத்திரன், ராமசாமி, தனுசு, குணசேகரன், அசோகன், சொக்கலிங்கம், வீர்நாரி லட்சுமிகாந்தம், குப்பன் ஆகியோர் செய்திருந்தனர். சங்க செயலாளர் பாலையா நன்றி கூறினார்.
